சாலை விரிவாக்கப் பணி முழுமை பெறாததால் விபத்துகள் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

சீா்காழி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முழுமை பெறாததால் விபத்துகள் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

சீா்காழி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முழுமை பெறாததால் விபத்துகள் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் திருக்கடையூா் வரை நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், கொள்ளிடம், தைக்கால், புத்தூா், எருக்கூா் வரை சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் அகற்றப்பபட்டு, தாா்ச் சாலை போடப்பட்டுவிட்டது. எருக்கூா் நவீன அரிசி ஆலை அருகே சில மீட்டா் நீளத்துக்கு மட்டும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதேபோல, சீா்காழி அருகே சூரக்காடு பகுதி மற்றும் மேலசாலை, அண்ணன்கோயில், காத்திருப்பு, செம்பதனிருப்பு ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள் முழுமை பெறாமல் பள்ளங்களாக உள்ளன. இதனால், அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பணிகளை விரைவில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com