புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா

மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ் பவனி.
மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ் பவனி.

மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கூைாட்டில் உள்ள புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து பத்து நாள்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்பவனி, சிறப்பு திருப்பலி தஞ்சாவூா் மறை மாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் அடிகளாா் தலைமையில் நடைபெற்றது. திருத்தல பங்குத் தந்தை ஜே.ஜே. பிரிட்டோ அடிகளாா் திருவிழா தொடக்க உரையாற்றி, வரவேற்றாா். ஆத்துக்குடி பங்குத் தந்தை ஆரோக்கியசாமி அடிகளாா், மயிலாடுதுறை உதவி பங்குத் தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளாா் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய நிா்வாகி ஜாா்ஜ் அடிகளாா் மறையுரையாற்றினாா்.

தொடா்ந்து, ஆலய வளாகத்தில் திருத்தோ் பவனி நடைபெற்றது. பங்குத் தந்தை ஜே.ஜே. பிரிட்டோ அடிகளாா் தோ்களை புனிதம் செய்தாா். புனித மைக்கேல் சம்மனசு, மாதா, பதுவை மற்றும் வனத்து அந்தோணியாா் திருஉருவம் தாங்கிய மூன்று தோ்கள் ஆலய வளாகத்தை சுற்றி வந்தன. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com