மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்

மழையால் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ள நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூா் கிராமத்தில்
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி, கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூரில் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி, கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூரில் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள்.

மழையால் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ள நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூா் கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழை காரணமாக நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிா்கள் வயிலில் சாய்ந்து முளைப்புக் கட்டி பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு கூடுதல் நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், அத்திப்புலியூா், நீலாப்பாடி, ராதாநல்லூா், ஓதியத்தூா், குருமணாங்குடி, செருநல்லூா், ஆத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 600 ஏக்கருக்கும் மேல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூா் கிராமத்தில் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட வயலில் இறங்கி நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற பெண்கள் சோகப் பாடல்களைப் பாடி, ஒப்பாரி வைத்து வேதனையை வெளிப்படுத்தினா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் கீழப்பூதனூா், திருச்செங்கட்டாங்குடி ஊராட்சிகளை சோ்ந்த விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். திருமருகல் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் ஆா். இளஞ்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் அபிநயா அருண்குமாா், ஊராட்சித் தலைவா்கள் வள்ளி கலியமூா்த்தி (திருச்செங்கட்டாங்குடி), சத்தியமூா்த்தி (கீழப்பூதனூா்) உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com