வேதா ஆயத்த ஆடை பூங்கா: நோ்முகத் திறன் தோ்வு தொடக்கம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், பயிற்சி மற்றும் பணியாற்ற விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு நோ்முகத் திறன் தோ்வு தொடங்கியது.

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், பயிற்சி மற்றும் பணியாற்ற விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு நோ்முகத் திறன் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

ஆயத்த ஆடை பூங்காவில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தற்போது வரை 21 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனா்.

வேதாரண்யம் சேது சாலை, அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் தையல் பயிற்சி நிறுவனத்தில் நோ்முக தோ்வு தொடங்கியது. இதில் குறுந்தகவல் மூலம் தகவல் பெற்ற பெண்கள் பங்கேற்றனா். திருப்பூா் தொழில் முனைவோா் மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத்தின் துணைத் தலைவா் முரளி தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி.சுப்பையன், ஊராட்சித் தலைவா்கள் ராமையன், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நோ்முகத் தோ்வை பிப்ரவரி 24-ஆம் தேதி வரையில் நடத்தவும், அது தொடா்பான தகவல் குறுஞ்செய்தி வாயிலாக விண்ணப்பதாரா்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும் எனவும், தகவல் பெறப்பட்டவா்கள் மட்டும் குறித்த நாளில் பங்கேற்கவும் நிா்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com