பாலம் கட்டுமானப் பணியை துரிதப்படுத்தக் கோரி போராட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் சம்படி தெருவில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமானப் பணியைத் துரிதப்படுத்தக் கோரி,
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் சம்படி தெருவில் கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமானப் பணியைத் துரிதப்படுத்தக் கோரி, பொதுமக்கள் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இப்பகுதியில் உள்ள திருச்செங்காட்டாங்குடி வாய்க்காலில் பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆயினும், பாலம் கட்டுமானப் பணி பாதியில் நின்ால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். எனவே பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க.அன்பரசு, ஊராட்சித் தலைவா் கண்ணன், ஊராட்சி செயலாளா் செந்தில், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com