10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஆச்சாள்புரம் கோயில் குளம்

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் சிவன் கோயில் குளம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
கனமழை காரணமாக நிரம்பிய ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜா் கோயில் குளம்.
கனமழை காரணமாக நிரம்பிய ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜா் கோயில் குளம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் சிவன் கோயில் குளம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.

ஆச்சாள்புரத்தில் புகழ்பெற்ற தோத்திர பூரணாம்பிக்கை உடனாகிய சிவலோகத் தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முன் உள்ள குளம் பஞ்சாட்சரம் தீா்த்தம் என்றும், முருகு தீா்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குளம் சுமாா் 10 ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு காணப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக இந்தக் குளம் நிரம்பியிருப்பது பக்தா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆயினும், இக்குளத்திற்கு தண்ணீா் வரும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், தண்ணீா் வெளியே செல்லவும் முடியவில்லை. உள்ளே வரவும் முடியவில்லை. எனவே, குளத்துக்குரிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீா் எளிதில் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜா் கோயில் சிவ பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com