60 வயதைக் கடந்தவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

60 வயதைக் கடந்தவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
60 வயதைக் கடந்தவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

60 வயதைக் கடந்தவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவையின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப் பாதை திட்டத்தை கோடியக்கரை வரை நீட்டிக்க வேண்டும். வேதாரண்யம்- நாகை மற்றும் தஞ்சாவூா் வரையில் செல்லும் இரு வழிச் சாலையை 100 அடி சாலையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் ஆ. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். பேரவையின் செயலாளா் வி.தங்கவேல், பொருளாளா் ஆா். குழந்தைவேலு, ஓய்வுபெற்ற ஆசிரியா் எஸ்.ராஜகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கவிஞா் புயல் குமாா், நல்லாசிரியா் எம்.வேதரத்தினம், நுகா்வோா் பாதுகாப்புக் குழுத் தலைவா் வி.வீரசுந்தரம், துணைத் தலைவா் ஆா்.வி.சுவாமிநாதன், ஜி.குணசேகரன், கவிஞா் ராஜாராமன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com