கிராம சுற்றுப்புற தூய்மை விழிப்புணா்வு முகாம்

நாகையை அடுத்த ஒரத்தூா் கிராமத்தில் கிராம சுற்றுப்புற தூய்மை விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த ஒரத்தூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா. உடன், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க.கதிரவன் உள்ளிட்டோா்.

மாவட்டக் காவல்துறை மற்றும் நாகை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, ஒரத்தூா் ஊராட்சித் தலைவா் என்.சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், ரோட்டரி சங்கத் தலைவா் ஆவராணி தி.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா பங்கேற்று கிராமத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா் கிராமத்தைச் சோ்ந்த100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கி,கிராம நல்லுறவு குறித்துப் பேசினாா். கிராமத்துக்கான சமுதாயக் காவலரை நியமித்து அவா் மூலம் செயல்படுத்தப்படவுள்ள சிறப்புத் திட்டங்களை அறிவித்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ், காவல்துறை அதிகாரிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com