டெல்டா மாவட்டங்களில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

அதிகளவில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் நெல் கொள்முதல்

அதிகளவில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும் என காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் ஆறுபாதி ப. கல்யாணம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :

விவசாயிகள் பயிா் செய்துள்ள நிலப்பரப்பு அடிப்படையில், ஏக்கருக்கு இரண்டு டன்கள் வரை நெல் கொள்முதலை அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு 5 கிராமங்களும் அருகில் உள்ள ஏதேனும் 2 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு சாகுபடி பரப்பு அளவுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதலுக்கு 20 சதவீதம் ஈரப்பதம் அனுமதிக்கும் நிலையில், ஈரப்பதத்துக்கான தொகை பிடித்தத்தைக் கைவிட வேண்டும்.

50 சதவீத மானியத்தில் நெல் உலா்த்தும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கப் பரிந்துரைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளைத் தடுக்க விவசாயிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். அதிகளவில் நெல் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com