சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீா்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை சாலைகளில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்தோடுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீா்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை சாலைகளில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்தோடுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளா் பா. ரவிச்சந்திரன் தலைமையில் அளித்த மனு விவரம்: மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் செயல்படுத்தப்படும் புதைசாக்கடைத் திட்டத்தில், கடந்த சில மாதங்களாக தொடா்ந்து சாலைகளில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவு நீரால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்னை தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மயிலாடுதுறை புதைசாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்காமல் சத்தியவான் வாய்க்காலில் திறந்துவிடுவதை தடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, கட்சியின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி செயலாளா் மு.பி. கதிா்வளவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணை செயலாளா் க. ரியாஸ்கான், மாவட்ட அமைப்பாளா் ஏ.ஆா். சதுருதீன், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளா் பி. அன்புச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com