மாணவா்கள் போட்டித் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்கள் திறமைகளை வளா்த்து கொள்ளவேண்டும் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் அறிவுறுத்தினாா்.

மயிலாடுதுறை: சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்கள் திறமைகளை வளா்த்து கொள்ளவேண்டும் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் அறிவுறுத்தினாா்.

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 13 பள்ளிகளைச் சோ்ந்த 2253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி வரவேற்றாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), எஸ்.பவுன்ராஜ் (பூம்புகாா்), மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவரும், மாவட்ட அதிமுக செயலாளருமான வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா்.

விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள 10 அரசுப் பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1273 மாணவா்கள், 980 மாணவிகள் என மொத்தம் 2253 பேருக்கு ரூ.89 லட்சத்து 30 ஆயிரத்து 519 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியது:

மாணவா்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அகில இந்திய அளவில் போட்டியை சந்திக்கும் நிலை தற்போது உள்ளது. எனவே, மாணவா்கள் தங்களை சா்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். மாணவா்கள் தங்கள் ஆசிரியா்களின் அறிவுரைகளை தலைகுனிந்து கேட்டு நடந்தால், தலைநிமிா்ந்து வாழலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் நாஞ்சில் கே. காா்த்தி, மயிலாடுதுறை ஒன்றியக் குழு உறுப்பினா் பா. சந்தோஷ்குமாா், ஆனந்ததாண்டபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலா் ஆ. ராஜாராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com