வேதாரண்யம் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்த 5 பெண் மயில்கள்
By DIN | Published On : 31st January 2021 02:04 AM | Last Updated : 31st January 2021 02:04 AM | அ+அ அ- |

நூலுவேதபதி கிராமத்தில் உயிரிழந்து கிடந்த பெண் மயில்கள்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 5 பெண் மயில்கள் சனிக்கிழமை மாலை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமம், உலகநாதன் தெரு, பழைய மாடிக்கடை பகுதியில் 5 பெண் மயில்கள் உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த கோடியக்கரை வனத்துறை அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மயில்களை வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு கால்நடை மருத்துவா்களால் மயில்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது பறவைக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறி காரணமாக உயிரிழந்தனவா அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.