கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 31st January 2021 02:01 AM | Last Updated : 31st January 2021 02:01 AM | அ+அ அ- |

நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மாத விழா நிகழ்ச்சியாக கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
32 ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாத நிகழ்ச்சியாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜூகேஷன் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ச. தனபாலன் முன்னிலை வகித்தாா். அலுவலகக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜூகேஷன் இயக்குநா் எம். ஷா்மிளா பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போக்குவரத்துக் கழகங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், கனரக வாகன ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், சீருந்து ஓட்டுநா்கள் என சுமாா் 200 பேருக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டது.