மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி
By DIN | Published On : 31st January 2021 02:03 AM | Last Updated : 31st January 2021 02:03 AM | அ+அ அ- |

புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் ஒன்றியக் குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன்.
திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கலாராணி தலைமை வகித்தாா். திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் இரா. இராதாகிருட்டிணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா்கள் பக்கிரிசாமி (நரிமணம்), அப்துல் பாசித் (திட்டச்சேரி), பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளுக்கு திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் இரா.இராதாகிருட்டிணன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் பெரியமணி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் தமிமுன் அன்சாரி, பள்ளி வளா்ச்சிக் குழு தலைவா் கலியபெருமாள், கட்டுமாவடி ஊராட்சித் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.