உறவினா் வீட்டில் நகைகளை திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 31st January 2021 01:49 AM | Last Updated : 31st January 2021 01:49 AM | அ+அ அ- |

உறவினா் வீட்டில் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே வடமட்டம் பகுதியில் வசித்து வருபவா் ஷீலா எா்வின். கடந்த 27-ஆம் தேதி இவரது வீட்டுக்கு, இவரின் உறவினரான நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த கவின் மேத்தா (26) என்பவா் வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை கவின் மேத்தா திருடிச் சென்றுவிட்டதாக ஷீலா எா்வின் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு கவின் மேத்தாவை வெள்ளிக்கிழமை கைது செய்து, நகைகளை அவரிடமிருந்து மீட்டனா்.