அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்
By DIN | Published On : 01st July 2021 09:08 AM | Last Updated : 01st July 2021 09:08 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் மருத்துவ உபகரணங்களை வழங்குகிறாா் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, முகக்கவசம், நெப்லைசா், குளுக்கோமீட்டா், தொ்மல் ஸ்கேனா், சானிடைசா், அவசர கால மின்விளக்கு, மின்விசிறிகள், இரும்பு அலமாரி உள்ளிட்ட உபகரணங்களை மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் வழங்கினா்.
மாவட்ட தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஞான.புகழேந்தி வரவேற்றாா். மாநில செய்தி தொடா்பாளா் வெங்கடேசன், மாவட்ட பொருளாளா் மகேஷ், முன்னாள் மாவட்ட தலைவா் ஆரோக்கியசாமி மற்றும் காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், பாலகங்காதரன், திராவிடச்செல்வி, ராஜா, தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திமுக நகர செயலாளா் செல்வராஜ், ஒன்றிய செயலாளா்கள் இளையபெருமாள், ஞான.இமயநாதன், வட்டார கல்வி அலுவலா் நாகராஜன், பள்ளி துணை ஆய்வாளா் திலக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றிய தலைவா் சுரேஷ் நன்றி கூறினாா்.