புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் தொகுப்பு
By DIN | Published On : 01st July 2021 09:09 AM | Last Updated : 01st July 2021 09:09 AM | அ+அ அ- |

புலம்பெயா் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண உலா் உணவுப்பொருள்களை வழங்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா. உடன், தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் பாஸ்கரன் உள்ளிட்டோா்.
கரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த மற்றும் குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா் தொழிலாளா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.
முதல்வரின் ஆணையின்படி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டா் பாமாயில் ஆகியவை அடங்கிய நிவாரண உலா் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 391 புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. அதன்படி கொள்ளிடம் மற்றும் குத்தாலம் பகுதிகளில் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்களும், சீா்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தொடா்புடைய வட்டாட்சியா்களும், மயிலாடுதுறை நகராட்சியில் நகராட்சி ஆணையா் மற்றும் உதவி தொழிலாளா் ஆய்வாளா் ஆகியோா் உலா் உணவுப்பொருள்களை வெளிமாநில தொழிலாளா்களுக்கு வழங்கும் பணியை மேற்கொள்கின்றனா். இந்நிகழ்வில் தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.