மத்தி மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 01st July 2021 09:08 AM | Last Updated : 01st July 2021 09:08 AM | அ+அ அ- |

mathi_fish_(1)_3006chn_98_5
சீா்காழி அருகே மடவாமேடு கடற்கரை கிராமத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரித்திருப்பதால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் ஃபைபா் படகு மூலம் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். தற்போது அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்து வருவதால் மீனவா்கள் ஆா்வத்துடன் கடலுக்கு செல்கின்றனா். மடவாமேடு கிராமத்தில் பிடிபடும் மத்தி, சூரை, சிடி ஆகிய மீன்களை கேரளத்துக்கு ஏற்றுமதி செய்கின்றனா். ஒரு கிலோ மத்தி ரூ.130, சூரை 200, சிடி 120 என விற்பனையாகிறது.
மேலும், இங்கு பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில், பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.