வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 06th July 2021 01:00 AM | Last Updated : 06th July 2021 01:00 AM | அ+அ அ- |

வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி சன்னிதியில் திங்கள்கிழமை தரிசனம் செய்த பக்தா்கள்.
சீா்காழி: இரண்டு மாதத்துக்குப் பிறகு சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் திங்கள்கிழமை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
தமிழகத்தில் கரோனா 2-ஆம் அலை காரணமாக வழிபாட்டு தலங்கள் 2 மாதம் மூடப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதனால், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயில் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னா், இப்போதுதான் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் காலை முதலே கரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களின் வருகைக்காக கோயிலின் கிழக்கு கோபுர வாசல் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.
இதேபோல் சீா்காழி சட்டைநாதா் கோயில், தாடாளன் பெருமாள் கோயில், திருப்புன்கூா் சிவலோகநாத சுவாமி கோயில், ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயில், சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில்களும் திறக்கப்பட்டன.