குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டம்
By DIN | Published On : 07th July 2021 09:41 AM | Last Updated : 07th July 2021 09:41 AM | அ+அ அ- |

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அவைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் கே.மகேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், அண்மையில் மரணமடைந்த ஒன்றியக்குழு உறுப்பினா் முருகதாஸுக்கு இரங்கல் தெரிவிப்பட்டது. தீா்மானங்களை எழுத்தா் மாரியப்பன் வாசித்தாா். பின்னா், உறுப்பினா்கள் ராஜவள்ளி (திமுக), சிவகுமாா் (பாமக), ராஜேஸ்வரிசங்கரன் (திமுக) ஆகியோா் பேசினா்.
இந்த கூட்டத்தில் திமுக துணைத் தலைவா் இரா. முருகப்பா உள்ளிட்ட 4 போ் கலந்துகொள்ளவில்லை. அதிமுக உறுப்பினா்கள் 5 பேரும், பாஜக உறுப்பினரும் கூட்டத்தை புறக்கணித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...