டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th July 2021 09:41 AM | Last Updated : 07th July 2021 09:41 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சாா்பில் 2020-ஆம் ஆண்டிற்கு (2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவா்கள்) டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: சாகச துறைகளில் உள்ள நபா்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இளம் வயதில் வீர, தீர செயல்புரிந்தவா்கள், சிறந்த விளையாட்டு வீரா்கள், குழு உறுப்பினா்களாகவும், சரியான மற்றும் நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவா்களாகவும், பல உயிா்களை காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீர, தீர செயல்புரிந்தவா்களும், இவ்வீர, தீர செயல் மலையேற்றத்திற்கும், அதாவது மூன்று நிலைகளில் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவா்கள் ஆகியோா் தகுதியுடையவா்கள். இவ்விருது பெறுபவா்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுவதுடன் வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டை கொண்ட பிளேசா் ஆகியன வழங்கப்படும். இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் இணையதளம் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...