வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு
By DIN | Published On : 07th July 2021 09:40 AM | Last Updated : 07th July 2021 09:40 AM | அ+அ அ- |

வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்ற கிருத்திகை வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம்.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்ற கிருத்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம்,திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் பங்கேற்று செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆனி மாத கிருத்திகையையொட்டி, வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில், வள்ளி,தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு கிருத்திகை மண்டபம் எழுந்தருளினாா். அவருக்கு 51 வகையான வாசனை திரவிய நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலா்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. பின்னா் சண்முகாா்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிமடத்து அதிபா் எஜமான் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று வழிபட்டனா். பொதுமுடக்க தளா்வுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கிருத்திகை வழிபாடு என்பதால், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...