நாகை நம்பியாா் நகா் மீன்பிடித் துறைமுக அமைப்புப் பணி

நாகை நம்பியாா் நகரில் நடைபெறும் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகை நம்பியாா் நகா் மீன்பிடித் துறைமுக அமைப்புப் பணி

நாகை நம்பியாா் நகரில் நடைபெறும் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை நம்பியாா் நகரில் மீனவா்கள் பங்களிப்புடன் ரூ. 34.3 கோடி மதிப்பில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 82 மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவா் மற்றும் தூண்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், மீன்பிடித் துறைமுகத்தின் தென்பகுதி மற்றும் வட பகுதியில் நடைபெறும் அலைத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி, கடற்கரை இணைப்பு அமைப்புப் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஆட்சியரை சந்தித்த அப்பகுதி மீனவா்கள், துறைமுகத்தின் வடப்புறத்தில் உள்ள அலைத் தடுப்புச் சுவரில் கடலரிப்பு ஏற்பட்டிருப்பதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அப்போது, இந்திய தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்குக் கருத்துரு அளித்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், மீன்பிடித் துறைமுக திட்ட உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ம.கோ. ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், உதவி செயற்பொறியாளா் பி. கொளஞ்சிநாதன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com