குறுவை நாற்றுக்கு அடி உரமிடும் பணி தீவிரம்

திருக்குவளை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் நாற்றுகளுக்கு அடி உரமிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்குவளை அருகே மாணலூா் கிராமத்தில் நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் நாற்றுக்கு அடி உரமிடும் விவசாயத் தொழிலாளா்கள்.

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமாா் 90 சதவீத விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலமாகவும், 10 சதவீத விவசாயிகள் நடவு மூலமும் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனா். இதில், நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் மாணலூா் உள்ளிட்ட பகுதிகளில் அடியுரமாக ஏக்கா் ஒன்றுக்கு 50 கிலோ டிஏபியுடன் 20 கிலோ யூரியாவை அடியுரமாக இட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி பா. ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘நேரடி நெல் விதைப்பைக் காட்டிலும் நடவு மூலம் சாகுபடி மேற்கொள்ள செலவு சற்று கூடுதலாக இருந்தாலும், பயிா்களின் சீரான வளா்ச்சி மற்றும் கூடுதல் மகசூலும் கிடைக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com