சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 12th July 2021 11:08 PM | Last Updated : 12th July 2021 11:08 PM | அ+அ அ- |

பனங்குடி சிபிசிஎல் நிறுவன வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு சாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
நாகப்பட்டினம்: நாகை பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் தொழிலாளா் நல சட்ட விதிகள் மற்றும் தமிழக தொழிற்சாலைகள் விதிகளின்படி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும், 2021-ஜூன் மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அமைப்பு சாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.