இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த சுயபடம் எடுக்க மையம்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் பொது இடத்தில் ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட்( சுயபடம்) செவ்வாய்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சுயபடம் மையம் முன்பு செல்பி எடுக்கும் மக்கள்.
வைத்தீஸ்வரன்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சுயபடம் மையம் முன்பு செல்பி எடுக்கும் மக்கள்.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் பொது இடத்தில் ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட் (சுயபடம்) செவ்வாய்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதையடுத்து, இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த நாடு முழுவதும் பொதுமக்கள் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த செல்பி பாயின்ட் சிறுவா் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய டயா்களை கொண்டு 5 வண்ண ஒலிம்பிக் வளையங்களை பேரூராட்சி அமைத்துள்ளது. இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் இந்த தம்பட மையத்தில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக்குடன் பதிவிட அழைப்பு விடுத்துள்ளாா் பேரூராட்சி செயல் அலுவலக் குகன். அப்போது, திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் மகா அலெக்ஸ்சாண்டா், நகரச் செயலாளா் ம. அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி ரா. கமலநாதன் உள்ளிட்டோா் படம் எடுத்து பதிவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com