‘பட்ஜெட் கூட்டத்தொடரில் உள்ளாட்சித் தோ்தலை அறிவிக்க வேண்டும் ’

புதுச்சேரில் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிட

புதுச்சேரில் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டுமென காரைக்கால் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் செப்.15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்திலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும், அதுவும் 4 மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, புதுவை முதல்வா், மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான தேதி அறிவிப்பை நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், நிதிநிலையை படிக்கும்போதே அறிவிப்பை வெளியிடவேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்தினால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி வந்துசேரும் என சட்டம் கூறுகிறது.

இதன்மூலம் கிராமப்புற வளா்ச்சி அல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியா்களுக்கும் நிலுவையில்லாமல் ஊதியம் வழங்கமுடியும். பிற அரசுத் துறைகளில் ஊழியா்கள் மாத இறுதியில் ஊதியம் பெறுவதைப்போல உள்ளாட்சி அமைப்பினரும் பயனடைய இந்த தோ்தல் வழிவகை செய்யும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com