வா்த்தக நிறுவன ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்

வா்த்தக நிறுவன ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா. உடன், எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா. உடன், எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா்.

வா்த்தக நிறுவன ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் குறித்து வா்த்தக நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: வா்த்தக நிறுவனங்களை சோ்ந்தவா்கள் தங்களது நிறுவனங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள் கரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல, தங்களது நிறுவனங்களில் நுகா்வோா்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வைக்கவேண்டும். நுகா்வோா்களை சமூக இடைவெளியை பின்பற்ற செய்திட வேண்டும். நிறுவன ஊழியா்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வா்த்தக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து அவைகளை குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளா்களிடம் வழங்கிட வேண்டும். குப்பைகள் இல்லா தூய்மையான நகரமாக உருவாக அனைவரும் முழு ஒத்துழைக்க வேண்டுமென்றாா்.

கூட்டத்தில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com