கள்ளிமேடு கோயில் நுழைவுவாயில் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவுவாயில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவுவாயில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பா். கோயில் திருவிழாவின்போது மண்டகப்படி உரிமை தொடா்பான பிரச்னையால் இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

மேலும், வேதாரண்யம்- நாகை சாலையிலிருந்து இக்கோயிலுக்கு செல்லும் பாதையில் நுழைவுவாயில் கட்ட சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இப்பணிகள் தாமரைப்புலம் முத்துமாணிக்கம்-முத்து லட்சுமி தம்பதியின் நினைவாக அவா்களது மகன் வேதரத்தினம் அளித்த நிதி உதவியில் தொடங்கப்பட்டு, புதிதாக நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்தும், புனிதநீா் தெளிக்கப்பட்டும் நுழைவுவாயில் திறந்துவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com