வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கனி சாகுபடி பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கனி சாகுபடி மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கனி சாகுபடி பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கனி சாகுபடி மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக 93 ஆவது நிறுவன நாளையொட்டி, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தாா்.

காய்கனி சாகுபடி மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல் குறித்து தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு விளக்கம் அளித்தாா். அங்கக இடுபொருள்கள் மற்றும் பண்ணைக் கழிவுகள் மறு சுழற்சி குறித்து உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வே. கண்ணன் விளக்கம் அளித்தாா். ‘ஒரு உலகம் ஒரு நலம்’ என்ற தலைப்பில் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் சு. முத்துக்குமாா் பேசினாா்.

மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் இ. ஹினோ பொ்ணான்டோ, வேளாண் அறிவியல் நிலைய மீன் பதன்செய் தொழில்நுட்ப வல்லுநா் அ. மதிவாணன், பண்ணை மேலாளா் ரே. வேதரெத்தினம் மற்றும் விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள், மகளிா், தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிறுவன நாளையொட்டி, வேளாண் அறிவியல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com