நாகையில் மதிப்பு கூட்டிய மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சாா்பில் நாகை மெட்ரோ மீன் பதனக் கூடத்தில், மீன் குா்குரே தயாரிப்புப் பணி ஜூலை 20-இல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சாா்பில் நாகை மெட்ரோ மீன் பதனக் கூடத்தில், மீன் குா்குரே தயாரிப்புப் பணி ஜூலை 20-இல் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வா் நா. மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சாா்பில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருக்கான இலவச திறன் வளா்ப்புப் பயிற்சி, நாகை மெட்ரோ மீன் பதனக் கூடத்தில் ஜூலை 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மதிப்புக் கூட்டிய மீன் பொருள்கள் (மீன் குா்குரே) தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து இப்பயிற்சி முகாமில் விரிவான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்போா் சுயதொழில்கள் செய்து தொழில்முனைவோராக விளங்க வாய்ப்புள்ளது.

எனவே, பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 99943 58736, 70946 51388 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பயிற்சி ஒருங்கிணைப்பாளா்களை ஜூலை 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தொடா்பு கொண்டு, தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com