குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 19th July 2021 08:55 AM | Last Updated : 19th July 2021 08:55 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
வேதாரண்யம் பூவன்தோப்பு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த தசரதன் (28) என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவரது குடும்பத்தினரும் ஏற்பாடு செய்துள்ளதாக வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.
இதைத்தொடா்ந்து, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மலா்கொடி மற்றும் போலீஸாா் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினா். மேலும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்துவைப்பது சட்டப்படி குற்றம் என இருவீட்டாரையும் எச்சரித்தனா்.