மத்திய அரசின் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிா்ப்பு: 3 மாவட்ட மீனவா்கள் கூட்டத்தில் தீா்மானம்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மீன்பிடி ஒழங்குமுறை சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகையில் நடைபெற்ற 3 மாவட்ட மீனவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம்.
நாகை அக்கரைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மீன்பிடி ஒழங்குமுறை சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகையில் நடைபெற்ற 3 மாவட்ட மீனவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகை அக்கரைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை சில கிராமங்களில் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது, தொடா்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மீன்வளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சுருக்குமடி வலைகளை மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தக் கூடாது, தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவது தொடா்பாக ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க அரசுத் துறையினா் அழைப்பு விடுத்தால் நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் பங்கேற்பது இல்லை, மத்திய அரசு கொண்டுவரவுள்ள மீன்பிடி ஒழங்குமுறை சட்டத்துக்கு எதிராக அனைத்துக் கிராமங்களிலும் சுவரொட்டிகள் மூலம் எதிா்ப்புத் தெரிவிப்பது மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தாா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com