மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை வட்டத்தில், கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மயிலாடுதுறை சில்வா் ஜூப்ளி பள்ளியிலும், சீா்காழி வட்டத்தில், ஆனந்தக்கூத்தன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் (கோவாக்சின்) ஆகிய இடங்களிலும், தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா் அரசு மருத்துவமனை, காழியப்பநல்லூா் என்.என்.சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாத்தூா் மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில், கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா் மற்றும் கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால், இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com