தொடுவாய் மீனவ கிராமத்தில் ஆய்வு

சீா்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கடலோர அமலாக்கப் பிரிவினா், மீன்வளத் துறையினா், கடலோர காவல் படையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடுவாய் மீனவ கிராமத்தில் ஆய்வு

சீா்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கடலோர அமலாக்கப் பிரிவினா், மீன்வளத் துறையினா், கடலோர காவல் படையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகாா் ஆகிய மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதி கோரி, குடும்பஅட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து இப்பகுதி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்தில், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது. அதேவேளையில் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை சட்டம் 1983-இன்படி, 21 வகையான ஷரத்துக்களும் முழுமையாக அமல்படுத்தபடும் என உறுதியளித்ததாா்.

அதன்படி, சீா்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், விழுப்புரம், கடலூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த மீன்வளத்துறை ஆய்வாளா்கள், கடலோர அமலாக்கப் பிரிவினா், கடலோர காவல் படையினா் என 10-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக பிரிந்து ஆய்வுமேற்கொண்டனா்.

ஒரு குழுவினா் தொடுவாய் மீனவ கிராமத்தில் படகுகளின் நீளம், படகு என்ஜின் திறன் மற்றும் வலைகள் குறித்த ஆய்வு செய்தனா். மற்றொரு குழுவினா் பூம்புகாா் பகுதி வழியாக கடல் ரோந்தில் ஈடுபட்டனா். முன்னதாக கொடியம்பாளையம் பகுதியிலும் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் மீன்பிடித்தொழில் ஒழுங்குமுறைசட்டம் 1983 -இன்படி வீதிகளை மீறிய படகுகள், படகின் உரிமையாளா்கள் என இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com