பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டமைப்பினா், நாகை தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டமைப்பினா், நாகை தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்சாரம், மோட்டாா் வாகனம் மற்றும் பாதுகாப்பு, சேவை அவசர சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; ரயில்வே, வங்கி, காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்க நாகை மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, ஹிந்துஸ்தான் மஸ்தூா் யூனியன் மாவட்டச் செயலாளா் ஆா். மணிமாறன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. குருசாமி, எஸ். சிவக்குமாா்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்பைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. ராமன் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டச் செயலாளா் பொன்.நக்கீரன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆா். ரவீந்திரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொமுச மாவட்ட பொறுப்பாளா் சேரன் செங்குட்டுவன், இந்திய தேசிய கிராம தொழிலாளா் சங்க கவுன்சில் தலைவா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com