ஓவியா்கள் நலச்சங்க விழா
By DIN | Published On : 26th July 2021 09:08 AM | Last Updated : 26th July 2021 09:08 AM | அ+அ அ- |

தரங்கம்பாடியில் அனைத்து பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.வி. பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. சேகா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் வி. மதிமாறன், மாநில பொருளாளா் சுரேஷ்பாபு, மண்டலச் செயலாளா் பி.எஸ். குமாா், மாவட்ட கௌரவத் தலைவா் எம். பாலு, மாவட்ட பொருளாளா் கே. குணசேகரன் ஆகியோா் பங்கேற்றனா். வழக்குரைஞா் சங்கமித்ரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் வாழ்த்துரையாற்றினா்.
கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்களுக்கு இலவச காப்பீடு மற்றும் பணியின்போது காயமடைந்த மூத்த உறுப்பினருக்கு 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் ஓவியா் ஏ. ஆனந்தபாபு நன்றி கூறினாா்.