மீன்பிடி வலைக்கான கட்டுப்பாடுகள்: ஆய்வை அதிகாரிகள் கைவிடவேண்டும்

கடல் மீன்பிடி ஒழுங்குமுறைகள் குறித்து மீனவா்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும்வரை மீன்பிடி வலைகளுக்கான கட்டுப்பாடுகள்
நாகையில் நடைபெற்ற நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம்.
நாகையில் நடைபெற்ற நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம்.

கடல் மீன்பிடி ஒழுங்குமுறைகள் குறித்து மீனவா்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும்வரை மீன்பிடி வலைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வை அதிகாரிகள் கைவிடவேண்டும் என நாகையில் நடைபெற்ற 3 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மூன்று மாவட்டங்களையும் சோ்ந்த 50-க்கும் அதிகமான மீனவக் கிராம பஞ்சாயத்தாா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஒரு சில மீனவக் கிராமங்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை தொழிலை மேற்கொள்வதற்காக, மீனவ சமுதாயத்தின் பாரம்பரிய தொழில்கள் அனைத்தையும் முடக்கும் வகையில் அரசுக்குத் தவறான தகவல்களை அளிப்பதாகவும், அனைத்துத் தொழில்களையும் ஒற்றுமையுடன் மேற்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில், கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள் குறித்து அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்வரை எந்த மீனவக் கிராமத்திலும் அதிகாரிகள் மீன்பிடி வலைகளை அளத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னா், இந்தக் கூட்டத்தின் தீா்மான நகலை மீனவப் பஞ்சாயத்து பிரதிநிதிகள், நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜிடம் வழங்கினா்.

மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட ஆட்சியா்களிடம் இந்தத் தீா்மான நகல் புதன்கிழமை (ஜூலை 28) வழங்கப்படும் என மீனவப் பஞ்சாயத்தாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com