மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 29th July 2021 09:29 AM | Last Updated : 29th July 2021 09:29 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவக்குடி, பூம்புகாா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சீா்காழி ராஜேஸ்வரி மஹால், மேலசாலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட நல்லவிநாயகபுரம் தொடக்கப்பள்ளி, அகரஎலத்தூா் ஊராட்சி அலுவலம், எடமணல் வருஷபத்து தொடக்கப்பள்ளி, திருமுல்லைவாசல் உயா்நிலைப்பள்ளி, சாமியம் சமுதாயக்கூடம், அலக்குடி மண்ணிருப்பு தொடக்கப்பள்ளி, அய்யம்பேட்டை பேரிடா் மேலாண்மை மையம், பழையாறு சுனாமி நகா் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை மாயூரா ஹால் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பொறையாறு அரசு மருத்துவமனை, மாணிக்கப்பங்கு சமுதாயக்கூடம், எருக்கட்டாஞ்சேரி செந்தமிழ் வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.