நாகை: வேளாண் சட்டங்களை எதிா்த்து சட்டநகல் எரிப்புப் போராட்டம்

நாகை மாவட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேளாண் சட்டநகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேளாண் சட்டநகல் எரிப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பு இயக்கங்களான விவசாய சங்கங்கள் சனிக்கிழமை (ஜூன் 5) முழு புரட்சி நாளாக அறிவித்து, வேளாண் சட்டநகல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தன. அதன்படி, இந்த போராட்டம் நாகை மாவட்டத்தில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றன.

சிக்கல் தபால் நிலையம் முன் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் வடிவேல் தலைமையில் நடைபெற்ற வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில், சிபிஎம் கட்சியிம் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, நாகை ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு உள்ளிட்ட விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இதேபோல, கீழ்வேளூா் தபால் நிலையம் முன் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினா் எம். சாந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் என். எம். அபுபக்கா், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தேமங்களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான வி. சரபோஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் மாவட்டத்தில், திருக்குவளை, திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com