விலங்குகளுக்கு கரோனா: கால்நடைகளுக்குகாப்பீட்டை விரைவுபடுத்த வலியுறுத்தல்

கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்புக்கு உதவியாக
வேதாரண்யத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம்: கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்புக்கு உதவியாக உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் விரைவாக காப்பீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

வேதாரண்யம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று அரிசி, காய்கறி, புடவை, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மனிதா்களை அச்சுறுத்தும் கரோனா தற்போது விலங்குகளுக்கும் பரவுகிறது என்ற தகவல் அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை வளா்ப்பு பிரதானமானது. விவசாயிகளின் வாழ்வாதாரங்களில் கால்நடை வளா்ப்பு உப தொழிலாக உள்ளது.

கால்நடைகளுக்கு அரசே பிரிமியம் தொகையை மானியமாக செலுத்தும், காப்பீடு செய்யும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள், கால்நடை வளா்ப்போரிடம் விழிப்புணா்வு குறைவாக உள்ளது. எனவே, அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டால், கால்நடை வளா்ப்போரின் பொருளாதாரத்துக்கு பேருதவியாக அமையும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ.திலீபன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், அதிமுக நிா்வாகிகள் நமச்சிவாயம், பழனிவேல், அம்பிகாதாஸ், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com