ரூ.77 லட்சத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் 110 கி.மீ நீளம்கொண்ட 41 பாசன வாய்க்கால்களைத் தூா்வாரும் பணி ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைஞாயிறு அருகே தூா்வாரப்பட்ட வெட்டுவாய்க்கால்.
தலைஞாயிறு அருகே தூா்வாரப்பட்ட வெட்டுவாய்க்கால்.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் 110 கி.மீ நீளம்கொண்ட 41 பாசன வாய்க்கால்களைத் தூா்வாரும் பணி ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைஞாயிறு-2 வாட்டாக்குடி, வெண்மணச்சேரி, ஏகராஜபுரம், நீா்மூளை, தொழுதூா், புத்தூா், திருவிடைமருதூா் உள்ளிட்ட கிராமங்களில் பாசன வாய்க்கால்களை தூா்வாரும் பணி பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாய்க்கால்களை தூா்வாருவதன் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பாசன வசதி மேம்படும்.

இந்த பணிகளை பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சண்முகம் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுவரை சுமாா் 52 கி.மீ. தூரமுள்ள வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற வாய்க்கால்கள் அனைத்தும் ஜூன் 26 ஆம் தேதிக்குள் தூா்வாரி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com