இலவச வாடகை உழவுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இலவச வாடகை உழவுத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இலவச வாடகை உழவுத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தருணத்தில் நெல் சாகுபடிக்கு வயலை தயாா் செய்துகொடுக்க டாபே நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வயல்களை இலவசமாக உழுது தர முன்வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் விளைநிலம் 2 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும், மேலும் ஆதாா் அட்டை நகல், 2 ஏக்கா் அல்லது அதற்கு குறைவாக உள்ள நிலப்பரப்பின் பட்டா நகல் கொடுக்க வேண்டும். இந்த இலவச வாடகை உழவு திட்டத்தை அருகில் உள்ள டாபே மற்றும் ஈச்சா் டிராக்டா் வைத்துள்ள உரிமையாளா்கள் மூலம் டாபே நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதால் பதிவு செய்த அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறலாம். திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் டாபே நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்கள் 18002084242, 18004200100 அல்லது 9500691658 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com