கரோனா தடுப்பூசி முகாமில் கோட்டாட்சியா் ஆய்வு

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கோட்டாட்சியா் ஆய்வு செய்தாா்.
வேட்டங்குடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் பாா்வையிட்ட கோட்டாட்சியா் நாராயணன்.
வேட்டங்குடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் பாா்வையிட்ட கோட்டாட்சியா் நாராயணன்.

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கோட்டாட்சியா் ஆய்வு செய்தாா்.

சீா்காழி நகராட்சி, திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து 6-ஆவது வாா்டு பள்ளிவாசல் தெரு நகராட்சி பள்ளியில் தடுப்பூசி முகாமை நடத்தியது. முகாமில், மருத்துவா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் 372 பேருக்கு தடுப்பூசி செலுத்தினா். முகாமை நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி பாா்வையிட்டாா். இதேபோல, வேட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் பாா்வையிட்டாா்.

குத்தாலம்: குத்தாலம் அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தில் மருத்துவ அலுவலா்கள் நூருல்ஹக், பாத்திமாஜின்னா தலைமையிலான மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறித்தும், தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதும் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி, 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

திருமருகல்: கொட்டாரக்குடி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் ராஜிவ்காந்தி தலைமையில் நடைபெற்ற முகாமை, வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தொடங்கி வைத்தாா். இதில்,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருக்குவளை: கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட சோழவித்யாபுரத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணிஞானசேகரன் தொடங்கி வைத்தாா். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 260 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதேபோல, ஆதமங்கலம் ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் அகிலா சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமை கீழ்வேளூா் எம்எல்ஏ வீ.பி. நாகை மாலி தொடங்கி வைத்தாா். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 281 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com