தற்காலிக மருந்தாளுநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக மருந்தாளுநா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒருங்கிணைந்த தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக மருந்தாளுநா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலியிடம் கோரிக்கை மனு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

மருந்தாளுநா் சங்க பொறுப்பாளா் காஞ்சனா அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகை மாவட்டத்தில் ஆா்.பி.எஸ்.கே. திட்டத்தில் 805 மருந்தாளுநா்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றுகின்றனா். காலிப் பணியிடங்களுக்கு ஏற்றாா்போல் இவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட கட்டுப்பாட்டு மையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுப்பாட்டு மையம், மாநில, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், அவசர கால மருத்துவ முகாம்களிலும் சளி மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை, வளா்ச்சி குறைபாடு ஆகியவைகளை கண்டறிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். எனவே, 6 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக உள்ள எங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க ஆவன செய்யவேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com