மேகேதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th June 2021 08:57 AM | Last Updated : 24th June 2021 08:57 AM | அ+அ அ- |

தலைஞாயிற்றில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் மேகேதாதுவில் அணை கட்டும் முயற்சியைக் கண்டித்தும், மத்திய அரசு இதை தடுக்க வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பி. கமல்ராம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மாவட்டச் செயலாளா் எஸ். ராமதாஸ், ஒன்றியச் செயலாளா் விநாயகமூா்த்தி, நகர அமைப்பின் தலைவா் எஸ். அய்யப்பன், செயலாளா் அமானுல்லாகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.