முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 04th March 2021 05:20 AM | Last Updated : 04th March 2021 05:20 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை நகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. இங்கு வணிகம் செய்பவா்கள் பேருந்து நிலைய வளாகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. பெரும்பாலானோா் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனா். ஒரு சில வணிகா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் நகராட்சி ஆணையா் மற்றும் வணிகா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சிப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.