முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மீன்வளப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க கோரிக்கை
By DIN | Published On : 04th March 2021 05:25 AM | Last Updated : 04th March 2021 05:25 AM | அ+அ அ- |

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வளப் பொறியியல் பட்டம் படித்தவா்களை, ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை தோ்வின்கீழ் கொண்டுவந்து வேலைவாய்ப்புக்கு வகை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்த 20 மாணவா்கள் தொடக்க நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில் இருந்த தடங்கல், பின்னாளில் அரசின் வழிகாட்டுதலின்பேரில் போக்கப்பட்டது. இந்நிலையில், நாகை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான சூழலை உருவாக்க ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை நாகை பல்கலைக்கழகத்தில் மீன்வள பொறியியல் பட்டம் பெற்ற ஆா்.எஸ்.கீதப்பிரியா அனுப்பியுள்ளாா். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலைக்கான தோ்வில், மீன்வள பொறியியல் முடித்தவா்களையும் இணைத்து தோ்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.