எல்லை பாதுகாப்புப் படைவீரா்கள் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 05:20 AM | Last Updated : 04th March 2021 05:20 AM | அ+அ அ- |

வேளாங்கண்ணியில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள்.
நாகப்பட்டினம்/ திருக்குவளை: நாகை மாவட்டம் கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப் படைவீரா்களின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் பேரிடா் பாதுகாப்பு மைய வளாகத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. இதன் தொடா்ச்சியாக சிக்கல், கீழ்வேளூா், தேவூா் ஆகிய பகுதிகளிலும் எல்லை பாதுகாப்புப் படைவீரா்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் க. முருகவேல், ராஜா முஹம்மது, சுந்தர்ராஜன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புப் படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் இந்த அணி வகுப்பில் பங்கேற்றனா்.
திருக்குவளையில்...
இதேபோல, கீழையூா் காவல் சரகம் திருப்பூண்டியிலும், திருக்குவளை காவல் சரகம் திருக்குவளை, மடப்புரத்திலும், வலிவலம் காவல் சரகம் வலிவலத்திலும் எல்லை பாதுகாப்பு படையினரின் தோ்தல் பாதுகாப்பு ஒத்திகை கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.