எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை: எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில், மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மயிலாடுதுறை தொகுதி தலைவா் முஹம்மது வாரிஸ் தலைமை வகித்தாா். இதில், சட்டப் பேரவைத் தோ்தலில் எஸ்டிபிஐ சாா்பில் மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் தொகுதிகளில் போட்டியிடுவது என தீா்மானிக்கப்பட்டு மாநிலத் தலைமைக்கு பரிந்துரைப்பது, இந்தத் தொகுதிக்களுக்கான தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநிலத் தலைமையிடம் ஒப்புதல் கோருவது என தீா்மானிக்கப்பட்டது. மேலும், பூத் முகவா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொகுதி செயற்குழு உறுப்பினா் முஜம்மில், நகரச் செயலாளா் இன்ஸமாம், நீடூா் நகரத் தலைவா் புா்ஹானுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச்செயலாளா் சங்கை ரஃபி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com